நான் வெளியே வந்த கதை

தோழிகளே எனது பெயர் மஹேஸ்வரி, நான் பெங்களூரில் இருக்கிறேன்। இது எனது வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்। முகநூலில் எனக்கு ஜோஷ்னா என்ற தோழி இருக்கிறாள்। முகநூலில் பார்த்த கிராஸ்ஸி பெண்களில் மிகவும் அழகானவர் அற்புதமானவர்। அவங்களுடைய ஈடுபாடு எனக்கு மிகவும் பிடிக்கும்। அவர்கள் நமது பாரம்பரிய ஆடைகள் உடுத்துவதிலும், நவநாகரீக ஆடைகள் உடுத்துவதிலும் சிறந்து விளங்கினார்।

அவர் ஒரு நல்ல பெண்। எனது கிராஸீ புகைப்படங்களை அவரிடம் காண்பித்தேன்। நீ அலங்காரம் செய்து கொள்ளவேண்டும் என்றார்। எனக்கு கடைக்கு சென்று அலங்கார பொருட்கள் வாங்க தைரியம் இல்லை। அவளிடம் எனது பிரெச்சனைகளை கூறினேன்। அவள் எனக்கு உதவி செய்வதாக கூறினாள்। ஒரு நாள் அவர்கள் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது என்னை அவர்களின் வீட்டிற்கு அழைத்தாள்। எனக்கு அவர்களின் வீட்டிற்கு செல்ல தயக்கம், இதற்கு முன்னர் ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவமே இதற்கு காரணம்।

அனால் அவர் அவர் வீட்டிற்கு சென்று அடையும் பயணம் முழுவதும் எனக்கு துணையாக இருந்தார்। அங்கே சென்ற உடன், நீங்கள் காலை நேர உணவு அருந்தினீர்களா என்று அவள் கேட்டாள், நான் இல்லை என்றேன், உடனே எனக்கு விருந்து அளித்தாள்। பின்னர் பெண்கள் உடை அணிவதை பற்றி கேட்டேன், அவளுக்கு வெளியில் செல்லும் வேலை இருப்பதால் அன்று அவளால் அணிய இயலாது என்று கூறினாள்। நீ பெண்கள் உடை அணிந்து கொள் என்றால்। எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது।

வேறு ஒரு அறைக்கு சென்று சேலை உடுத்த தொடங்கினேன்। எனது சவாரி முடி நன்றாக இல்லை என்றேன், உடனே அவரின் சவாரி முடியை எனக்கு கொடுத்தார்கள்। எனக்கு புடவை சரியாக கட்டிக்கொள்ள வரவில்லை, அதை அவள் தான் சரி செய்தாள்। அலங்காரம் எப்படி செய்வது என்பதை எனக்கு செய்து காட்டினாள்। தாடி மீசை ஒழுங்காக சவரம் செய்ய சொன்னாள்। அதை ஒழுங்காக செய்யவில்லை என்றாள் நமது தோற்றத்தில் பெண் தெரிய வாய்ப்பு இல்லை என்றாள்।

பின்னர் அவர்கள் பெண் வேடம் இட்ட புகைப்படங்களை எனக்கு காண்பித்தார்। அவர்கள் பெண்ணாக செய்த ஒவ்வொன்றையும் நான் ரசித்தேன்। அவர்களின் குழுவில் நானும் இணைய ஆசை கொண்டேன்। அனால் என்னால் முடியவில்லை। புடவையில் புகைப்படம் எடுத்தேன், எனக்கு சலிப்பு ஏற்பட்டது। வேறு உடை மாற்றிக்கொள்ள ஆசைப்பட்டேன்। அவளிடம் வேறு உடை கிடைக்குமா என்று கேட்டேன்। அவளின் பையில் பார்த்தல், எல்லாம் துவைக்க வேண்டிய நிலையில் இருந்தது।

நான் சற்று கவலை கொண்டேன்। அவள் அதை பார்த்துவிட்டு வருத்தபடாதே என்று ஒரு பெண்கள் டீ-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் வடிவிலான பெண்கள் ஷார்ட்ஸை என்னிடம் கொடுத்தாள்। நான் நவநாகரீக பெண்ணை போல இருந்தேன்। அதில் சில புகைப்படங்கள் எடுத்தோம்। அப்போது அவள் என்னிடம், நீ இது போன்ற உடைகள் அணியும் பொழுது உனது கால்களில் இருக்கும் முடியை நீக்க வேண்டும்। சவரம் செய்வதற்கு பதிலாக வாக்ஸிங் செய்ய வேண்டும் என்றாள்।

ஆவலுடன் 2 – 3 மணி நேரம் தான் செலவு செய்து இருப்பேன்। அனால் நிறைய விஷயங்கள் கற்று கொண்டதை போல எனக்கு இருந்தது। அவள் எனக்கு தோழியாகவும் எனது மூத்த சகோதரியாகவும் காட்சி அளித்தாள்। நாங்கள் சந்தித்து சுமார் 5 மாதங்கள் இருக்கும்। அதற்கு பின்னர் பல சந்தர்ப்பங்கள் அமைந்தும் என்னால் சந்திக்க இயலவில்லை। அவளை விரைவில் சந்திக்க வாய்ப்பு வழங்குமாறு எல்லாம் வல்ல இறைவனை நான் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்।

முற்றும்।।।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started
search previous next tag category expand menu location phone mail time cart zoom edit close