
என்னதான் தருண் அவனது பெண்மையை உணர்ந்து மகிழ்ச்சியாக இருந்தாலும், அவனுக்குள் ஒரு பயம் இருந்தது, யாரிடமாவது மாட்டிகொள்வோமோ என்று। அந்த 3 நாட்கள் அவளின் பெண்மையை எண்ணி சந்தோஷ பட்டாள்। அடுத்த நாள் சாம் ஊரில் இருந்து வருவதை அவனுக்கு தெரியும் இருந்தும் பெண் உடையில் தூங்கிவிட்டான்। மேலும் அவன் கதவை தாள் போட மறந்துவிட்டான்। அவனுக்கு கதவு தட்டும் சத்தம் கேட்டது।
சாம் உள்ளே நுழைந்தான், தருண் இப்போது தாமரையாக இருந்தான், அவனுக்கு என்ன செய்வது, என்ன சொல்லி சமாளிப்பது என்றே புரியவில்லை। சாமை பார்க்க அவன் வெட்க பட்டன், தலை குனிந்து நின்றான்। கண்ணில் கண்ணீர் வேகமாக ஓடியது। தாமரை அவளின் கதையை கூற ஆரம்பித்தாள்। முதலில் சாம் கோவம் கொண்டான்। பின்னர் அவளின் கதையை கேட்டு, அவளுக்கு ஆறுதல் கூறினான்। அவளுக்கு உதவி செய்வதாக கூறினான்।
அடுத்த நாள் சாம், அர்ஜுன் என்னும் பையனை தாமரைக்கு அறிமுகம் செய்து வைத்தான்। இவர் ஒரு நாடக குழு நடத்தி வருகிறார்। அவர் நடத்தி வரும் நாடகத்தில் நாயகிக்கு உடல் நன்றாக இல்லை, அதனால் அடுத்த நிகழ்ச்சியில் அவர்களால் கலந்து கொள்ள முடியாது। நீ பெண் வேடம் இட்டுக்கொண்டு அந்த இடத்தில நடிக்க சம்மதமா என்று கேட்டார் அர்ஜுன்। தாமரை சிறிது நேரம் யோசித்து தனது சம்மதத்தை தெரிவித்தாள்