
ஒரு மனிதனுக்கு மிகவும் தேவையான விஷையம் சந்தோஷம் மற்றும் நிம்மதி. இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. என் வாழ்வில் அது எவ்வாறு அமைந்தது என்று தான் இந்த கதையில் நாம் பார்க்க போகிறோம். என் பெயர் அகிலன். இப்போது என் வயது முப்பத்தி நாலு. நான், என் மனைவி, மகனுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு வருகிறேன். என் வாழ்வில் பெண்களுக்கான பக்கங்கள் பெரிய அளவில் இல்லை.
அதனால் எனக்கு திருமணம் ஆகும் வரையில் பெண்ணின் வாசமே என்னவென்று தெரியாது. எனக்கு ஒரு அண்ணன் தான், அக்கா தங்கை என யாரும் இல்லை. உறவினர் வழியிலும் பெண் சகோதரிகள், அத்தை பொண்ணு, மாமா பொண்ணு என்று யாருமே இல்லை. ஏதோ எங்கள் குடும்பத்திற்கு உண்டான சாபக்கேடாக கூட இருக்கலாம். அது நமக்கு தேவை இல்லை. நாம் கதைக்குள் வரலாம். அண்ணன் நன்கு படித்து வெளி நாட்டில், வேலை கிடைத்து சென்று விட்டான். அவனுக்கு அருமையான மனைவி கிடைத்தார்.
எனக்கு என் அண்ணியை போலவே ஒரு பெண் பார்க்க வேண்டுமென வீட்டில் கூறினேன். அப்போது தான் என் அண்னிக்கு ஒரு தங்கை இருப்பதாகவும் அவள் பெயர் அணிதா எனவும் தெரிய வந்தது, அந்த அளவு பெண்கள் மேல் ஈர்ப்பு இல்லாமல் நான் இருந்தேன். அணிதா என்னை திருமணம் செய்ய சம்மதித்தால். எனக்கு அளவு கடந்த ஆனந்தம். எங்கள் இருவர் இடையில் காதல் தீ பற்றி கொண்டது, நிச்சயத்திற்க்கும், திருமணத்திற்க்கும் இடைப்பட்ட நான்கு மாதங்களும், நரக வேதனை தந்தது. அது ஒரு சுகமான வழியா, இல்லை வழியான சுகமா என்று தெரியவில்லை.