
என்னதான் படித்தவறாகவும் பணக்காரறாகவும் இருந்தாலும் இவ்வளவு அன்பு வைத்துள்ளார், இவரை போய் பிரிந்து செல்ல அந்த பெண்ணுக்கு எப்படி தான் மனசு வந்ததோ என எண்ணினேன். இரவு ஆனது நீ அந்த அறையில் படுத்து கொள் நான் இந்த அறையில் படுத்து கொள்கிறேன் என்றார். நீ எனக்கு உதவி செய்ய வந்தவள், உன் மீது எனக்கு எப்போதுமே தப்பான கண்ணோட்டம் வர கூடாது என்றார். இவளோ நல்ல மனிதராக இருக்கிறாரே என்று அவர் மீது எனக்கு ஒரு மென்மையான இடம் வந்தது. எப்பாடு பட்டாவது இவரை சந்தோஷம் கொள்ள வைக்க வேண்டும். இவருக்கு ஒரு நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என முடிவு செய்தேன்.
அடுத்த நாள் அவரை தேநீர் குடுத்து எழுப்பினேன். நீ என் இதெல்லாம் செய்கிறாய் என்றார். இதுவும் நடிப்பு தான் மனைவி வேஷம் இடும் போது செய்ய வேண்டிய பணிகளுள் ஒன்று தான் என்றாள் ஆனந்தி. அவர் அலுவல் சென்று திரும்பி வந்தார். நான் சில வீடு வேலைகளை செய்தேன். சொல்ல மறந்து விட்டேன், அந்த சமையம் எனக்கு ஸெமெஸ்டர் விடுமுறை அதனால் தான் என்னால் இதற்கு ஒப்புக்கொள்ள முடிந்தது. அன்று அவர் முகத்தில் அவளவ்வு ஆனந்தம், இன்று இந்த மனிதன் யார் முகத்தில் விளிததாரோ இவருக்கு இன்று பதவி உயர்வு கிடைத்து உள்ளது. யார் அந்த மஹாலட்சுமி என கேட்டார். அவர் எனக்கு அன்பு பரிசாக ஒரு ஆத்திகையை கொடுத்தார்.
ஆனந்தி எதுக்கு இதெல்லாம், நீங்கள் நன்றாக பணி செய்ததால் உங்களுக்கு பதவி உயர்வு கிடைத்தது, எனக்கு இதில் துளி கூட சம்மந்தம் இல்லை என்றாள். என் திறமைக்கு என்றாள் எப்போதோ கிடைத்து இருக்க வேண்டியது ஆனால் அதிர்ஸ்தம் இல்லாத காரணத்தால் கிடைக்கவில்லை. நீ வந்த நேரம் எனக்கு கிடைத்துவிட்டது என்றார். பின்னர் இரண்டு நாட்கள் சந்தோஷமாக சென்றது. ஊரில் இருந்து அவருடைய அம்மா அதாவது என் மாமியார் வந்தார். அவர் வந்த உடன் ஆனந்தி ஆனந்தமாக ஓடி சென்று அவர் சாமான்களை வாங்கினாள். பின்னர் அவர்கள் கால்களை தொட்டு வணங்கினார். அவர் மாமியாருக்கு ஒரே ஆச்சரியம். இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா என்று. அவ்வளவு மரியாதையாக நடந்து கொண்டாள் ஆனந்தி. உன் பெயர் என்ன என்று கேட்டார்.
ஆனந்தி என பதில் சொன்னாள். என் குடும்பத்துக்கு ஆனந்தம் தர வந்தவள் நீ என்றார். ஆனந்தியின் கண் கலங்கியது. இவ்ளோ பாசம் கொண்ட மாமியாரை என் அந்த மருமகள் விட்டு சென்றாள் என்று. ஆனால் இது அவர்கள் குடும்ப விசயம் என்ன இருந்தாலும் நான் மூணாவது மனிதன் தானே என தோன்றியது. இவர்கள் பாவம் இவர்கள் இங்கு இருக்கும் வரை ஒரு அன்பான மருமகளாக நடந்து கொள்ள வேண்டுமென முடிவு செய்தேன். அவர்களை ஒரு வேலையும் செய்ய விட கூடாது நாம் எல்லா வேலைகளையும் தலையில் தூக்கி போட்டு செய்ய வேண்டுமென செய்தேன். ஏற்கனவே நான் தாங்கி இருந்த இடங்களில் சுத்தம் செய்வது, பாத்திரம் விளக்குவது, துணி துவைப்பது எல்லாம் எனக்கு அத்துப்படி. சமையல் மட்டும் தான் தெரியாது. கட்டில் சுகம் தர இயலாது இதை தவிர மற்ற எல்லா வேலைகளும் தெரியும்.
என்னை பார்த்து என் மாமியார் வியந்தார். முதல் மருமகளிடம் சிக்கி தவித்த என் மகனுக்கு இரண்டாவதாக வந்தவள் சிறப்பாக பார்த்து கொள்கிறாள். என் பெயரனோ பெயர்த்தியோ பார்த்து விட்டால் நிம்மதியாக இறந்து விடலாம் என முடிவு செய்தார் என் மாமியார். வழக்கம் போல நான் வேறு அறையிலும் அவர் வேறு அறைக்கும் சென்றோம், என் மாமியார் உங்களுக்குள் என் இந்த இடைவெளி என்றார். வேறு வழி இல்லாமல் ஒரே அறைக்கு தல்ல பட்டோம். அவர் கட்டிலில் படுத்து கொள்வதாகவும் என்னை பாய் போட்டு படுத்து கொள்ள சொன்னார். அடுத்த நாள் காலை என் மாமியாருக்கு சந்தேகம். இரவு எதுவுமே நடக்க வில்லை போலும் என யோசித்தார். இப்படியே விட்டால் என்னால் பாட்டி ஆகா முடியாது இவர்களை எப்படியேனும் சேர்த்து வைக்க வேண்டுமென முடிவு செய்தார்.