
அவர்கள் மூலமாக ஒரு ஆண் பெண் போல உடை அணிவதில் தவறு ஒன்றும் இல்லை என தெரிந்தது, இருந்தும் ஏன் இந்த கட்டுப்பாடு என புரியவில்லை, நாம் அணியும் சட்டை, பாண்ட் போன்ற ஆடைகளை பெண்கள் உடுத்தினால் ஒன்றும் தவறில்லையா இது என் எங்களுக்கு மட்டும் இப்படி ஒரு கட்டுப்பாடு, எங்களுக்கு வித வித மான சேலைகள், சுடிதார்கள், தாவணி போன்ற ஆடைகள் அணிய அனுமதி கிடைக்காதது ஏன் என கோவம் எழுந்தது, ஆனால் என்ன செய்வது, ஆண் இவ்வாறு செய்தால் அவர்களை உஸ் என்றும் அரவாணி என்றும் ஒம்போது எனவும் கேவலமாக பேசும் சமுதாயம் தானே இது.
ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள். ஆனால் அவள் அவ்வளவ்வு எளிதாக எல்லோர் கண்களுக்கும் தெரிய மாட்டாள். உடை அளவிலும் உள்ளத்தினாலும் பெண்ணாக இருப்பவள் திருநந்கை. ஆனால் உடை அளவில் மட்டும் பெண்ணாக இருக்க நினைப்பவள் தான் மற்றதையி என புரிந்தது. நிறைய பேருடன் முகணூலில் தொடர்பு ஏற்பட்டது, என்னுடைய உண்மை கணக்கை விட, மாத்திரதையீ கணக்கில் தான் அதிக நேரம் செலவு செய்தேன். எல்லாரும் சில உண்மை மாத்திரதையினர் இருந்தனர் அவர்கள் தொலைவாக இருந்தனர்.
மேலும் அவர்கள் என்னை போலி என நினைத்து எனக்கு உதவ முன் வரவில்லை. செறி இவர்கள் தான் இப்படி என்றாள், சில ஆண் மகன்கள் எனக்கு உதவி புரிய ஒப்புக்கொண்டனர், ஆனால் பதிலுக்கு, என்னுடன் உடல் உறவு கொள்ள ஆசை பட்டதாக கூறினர். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. வீட்டில் இருக்கும் வரை அம்மாவின் உடையை உடுத்தி கொள்ளலாம், ஆனால் படிக்கும் போது என் உணர்ச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என தெரியவில்லை.